இலங்கைக்கு அந்நியச் செலாவணியைத் தேடித் தரும் வழியான அலங்கார மீன் தொழில் மற்றும் நீரியல் தாவர தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளை அதிகரிக்கச் செய்வதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர்வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி,
நுகர்வோர்கள் மத்தியில் நீர்வாழின மீன் நுகர்வுக்குப் பொருத்தமான உற்பத்தியை வழங்கும் நோக்குடன் நாடு முழுவதிலுமுள்ள உள்ளக நீர்;த் தேக்கங்களில் நீரியல் கைத்தொழிலின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் கொண்டு வரப்பட்ட வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் நீர்வாழின மீன் இனப்பெருக்க நிலையங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கு 2023.04.09ஆந் திகதி கிழக்கு மாகாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் கடலுணவு ஏற்றுமதியின் மூலம் பெறப்படும் அந்நியச் செலாவணி முறையாக கிடைப்பதை உறுதி செய்வது மீன் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடியாத மீனவர்களுக்கு நான்காவது சுற்று இழப்பீடு வழங்க எதிர்வரும் 2023.04.10ஆந் திகதி முதல் வழங்குவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக பன் மடங்கு அதிகரித்துள்ள மீன்பிடி சாதனங்களின் விலை அடுத்த சில மாதங்களில் ஓரளவு குறையுமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
- ධීවර වරාය සේවා නංවාලීමට කඩිනම් පියවර: 'කාර්යක්ෂම සේවාවක් අපේ ප්රමුඛතාවයයි' - අමාත්ය; 'මාස 6කින් පෙනෙන වෙනසක්' - නියෝජ්ය අමාත්ය
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය
- ඉස්සන් කර්මාන්තය සඳහා නව දැක්මක්: 2026 ඉලක්ක සපුරාලීමට රජය සහ අපනයනකරුවන් එක්වෙයි.
- கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து விசேட நிதி உதவி – கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.