இலங்கையின் கடற் பரப்பில் கடற் தாவரங்கள் வளர்ப்புக்கு பொருத்தமான சூழல் நிலவுவதால் வெளிநாட்டு முலீட்டாளர்கள் பலர் இந்த பிரிவில் முதலிடுவதற்கு பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதற்கமைய இந்திய மற்றும் நெதர்லாந்து முதலீட்டுக் குழுவினர் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இங்கு கருத்து தெரிவித்த Carbon & Blueplant நிறுவனத்தின் தலைவர் கூறியபோது, வட மாகாணத்தின் செட்டிகுளம் மற்றும் அம்பிகை நகர் ஆகிய பிரதேசங்களில் 100 ஏக்கர் அளவிலான பகுதியில் கடல் தாவரம் வளர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் சில பிரதேசங்களிலும் இச்செய்கையை விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக தமது நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான அனுபவம் இருப்பதாக தெரிவித்த இவர், பிரதேசத்தில் சுமார் 600 வரையிலானவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் எனவும், ரூபா 50,000/- க்கும் மேல் வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சிகளை வழங்க தமது நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு அமைச்சின் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சின செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த மற்றும் Carbon & Blueplant நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.