en banner

WhatsApp Image 2025 12 26 at 19.51.10

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2025 12 24 at 21.56.20உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவப் பெருமக்களுடன் இணைந்து, சமாதானத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் இந்த உன்னத தருணத்தில், உங்கள் அனைவருக்கும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் உதயமாகட்டும் என இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.

WhatsApp Image 2025 12 23 at 22.28.55சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மீன்பிடித் துறைக்கு ஏற்பட்ட சேதத்தின் முதற்கட்ட மதிப்பீடு 7,649 மில்லியன் ரூபாவைத் (765 கோடி ரூபா) தாண்டி உள்ளதாக கடற்றொழில் அமைச்சு (23.12.2025) அறிவித்துள்ளது. 

WhatsApp Image 2025 12 24 at 13.53.00கிறிஸ்துமஸ் திருநாள் அன்பு, சமாதானம், கருணை மற்றும் நம்பிக்கையின் உலகளாவிய செய்தியுடன் மனித குலத்தின் இதயங்களை ஒன்றிணைக்கும் புனிதமான நாளாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2025 12 24 at 17.30.57கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச அவர்களுக்கும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) இலங்கைக்கான பிரதிநிதி திரு. குருனுமா கென்ஜி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் இடையில், அனர்த்தத்திற்குப் பின்னரான சூழலில் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பது குறித்த வெற்றிகரமான கலந்துரையாடலொன்று டிசம்பர் 16 ஆம் திகதி நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube