en banner

WhatsApp Image 2025 05 15 at 10.11.11 1

இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) நடைமுறைப்படுத்தப்படும் "வெவ அபே கம்ஹலய்" திட்டத்தின் கீழ், கடந்த நான்கு மாத காலப்பகுதியில் நாடு முழுவதிலுமுள்ள பருவ கால மற்றும் நிரந்தர நீர்த்தேக்கங்களில் 18 மில்லியன் மீன் குஞ்சுகள் வெற்றிகரமாக இடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2025 05 09 at 09.40.21 2

சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் யான்டாய் நகர மேயர் கௌரவ ஜெங் டெயான் அவர்கள் தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடல் நேற்று (மே 8, 2025) கடற்றொழில் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

istockphoto 502662300 612x612கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம்  04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

WhatsApp Image 2025 05 08 at 17.44.38

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும் தென் கொரிய முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (மே 8, 2025) அமைச்சில் நடைபெற்றது. இலங்கைக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

WhatsApp Image 2025 03 30 at 14.42.43மதுரங்குளியில் உள்ள Ocean Food தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓஷன் ஸ்டார் ஜாக் மெக்கரல் டின் மீன்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்களில் ஏற்றுவது, 2025 மார்ச் 29 அன்று தொழிற்சாலை வளாகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube