en banner

IMG 3822ஆழ்கடலில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் விபத்துகளுக்கு உள்ளாகியுள்ள இலங்கையின் பலநாள் மீன்பிடிக் கலன்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றை மீண்டும் கரைக்குக் கொண்டு வரும் பணிகள் குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நேரடித் தலையீடுகளை மேற்கொண்டு வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

4மொரிஷியஸ் நாட்டின் தனியார் துறை நிறுவனமொன்றிற்காக இலங்கையின் சீநோர் (Cey-Nor) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும், 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள பாரிய படகின் முன்னேற்றத்தைப் பார்வையிட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (21) முற்பகல் மட்டக்குளி சீநோர் கப்பல் கட்டும் தளத்திற்கு விசேட களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

WhatsApp Image 2026 05 19 at 18.31.11வங்காள விரிகுடா கடல்சார் சூழல் தொகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான ‘BOBLME II’ செயற்திட்டத்தின் மூன்றாவது பிராந்திய வழிகாட்டல் குழுக் கூட்டம் (3rd Regional Project Steering Committee Meeting) இன்று (19) நீர்கொழும்பு ஜெட்விங் சீ (Jetwing Sea) ஹோட்டலில் ஆரம்பமானது.

WhatsApp Image 2026 05 19 at 19.06.57நாட்டின் அலங்கார மீன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து, இத்துறையை அபிவிருத்தி செய்வது குறித்த விசேட கலந்துரையாடல் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நேற்று (18) அமைச்சில் நடைபெற்றது.

WhatsApp Image 2026 05 18 at 19.16.13 1தென் மாகாண மீனவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஹிக்கடுவ பிரதேச மீனவ சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் தொழில்சார் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உயிர் காக்கும் அங்கிகள் (Life Jackets) மற்றும் ஏனைய பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் கடந்த மே 15ஆம் திகதி ஹிக்கடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகள்

Youtube