மாத்தறை மாவட்ட மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இன்று (08) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் தொழில்சார் மற்றும் உட்கட்டமைப்பு பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இரண்டாவது மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (04) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜப்பானின் டோக்கியோவில் கடந்த ஜூன் 02 முதல் 04 வரை நடைபெற்ற ‘தீவு நாடுகளின் சமுத்திர மாநாட்டில்’ (Island States Ocean Summit - ISOS) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்பான் கடற்றொழில் ஆராய்ச்சி மற்றும் கல்வி முகவரகத்தின் (Japan Fisheries Research and Education Agency - FRA) உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த 02ஆம் திகதி ஜப்பானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- இலங்கையின் கடற்றொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்





