இந்நாட்டு மீன்பிடித் தொழிலில ஈடுபடும் பன்னாள் மீன்பிடிப் படகுகளுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் IOC கம்பனியின் பிரதிநிதிகளுக்கிடையில் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த IOC கம்பனியின் பிரதிநிதிகள், தற்போது இலங்கை பெற்றௌலியம் கூட்டுத்தாபனத்தின் மூலம் இலங்கையில் மீன்பிடித் துறைமுகங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் வழங்கப்படும் விலையை ஒப்பிட்டு- அந்த விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருள் வழங்குவதற்கு தமது கம்பனிக்கு முடியுமெனவும் தெரிவித்தார்.
மேலும் தற்போது துறைமுகங்களில் உள்ள எரிபொருள் நிலையங்கள் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்குரியதெனவும், இந்த எரிபொருள் நிலையங்களுக்கு தமது நிறுவனம் எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்போது முரண்பாடு ஏற்படக்கூடுமெனவும் மீன்பிடி துறைமுகங்களுக்குள் தனியாக எரிபொருள் நிலையத்துக்கு நடாத்துவதற்கு இடமளித்தால், டீசல் ரூபா 351/--வைவிட குறைந்த விலைக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக பிரதிநிதிகள் குழுவினர் தெரிவித்தனர்.
கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்து தெரிவித்தபோது, நாட்டில் பன்னாள் மீன்பிடி மீனவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதால் அவர்களுக்கு எரிபொருள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்தார். IOC கம்பனியின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாவும் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துடன் முரண்படாத வகையில் பெற்றௌலிய அமைச்சரிடமிருந்து பெறக்கூடிய ஆதரவைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருதாகவும் தெரிவித்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சின செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, ஐழுஊ கம்பனியின் பிரிதிநிதிகள், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த ஆகியோர்கள் அடங்கலாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.