en banner

WhatsApp Image 2023 11 29 at 12.12.08

மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சனை மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக தான் மேன்மைதங்கிய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்துக்கு முன்வைத்துள்ளதாகவும் அவர் அந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் உடனடியாக தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இது தொடர்பாக தெரிவித்தபோது 2023.11.28ஆந் திகதி திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் நடைபெற்ற டயலக் நிறுவனத்தினால் சோலர் மென்பொருளை (app) அறிமுகப்படுத்தும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் முகங்கொடுத்த கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடிய போன்ற காரணங்களினால் பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை தற்போதைய நிலைக்கு கொண்டு வந்துள்ள மேன்மைதங்கிய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய அமைச்சர், இந்நாட்டு மீனவ மக்களின் நிலையை சர்வதேச மட்டத்துக்கு மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

டயலக் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட சோலர் மென்பொருளின் (app) ஊடாக கால நிலை மற்றும் கடலில் நிகழும் மாற்றம் தொடர்பாக நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் அறிந்து கொள்வதன் மூலம் மீன்பிடித் தொழிலை பாதுகாப்பாக மேற்கொள்ள இது பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மென்பொருள் தொடர்பாக அறிவுறுத்துவதற்கு வந்த டயலக் நிறுவனத்தின் முகவர்கள் கடலில் மீன் வளங்கள் செறிந்துள்ள இடங்கள் பற்றிய தகவலை முன்கூட்டியே மீனவர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிக்குமாறு ஏற்கனவே தான் கோரியதாகவும், இது தொடர்பாக அவதானம் செலுத்துவதாகவும், இதற்கான வேலைத் திட்டமென்றை விரைவில் தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு டயலக் நிறுவனம், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம், வளி மண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், டயலக் நிறுவனத்துக்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் தனது அமைச்சு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

இச்சந்சந்தர்ப்பதின்போது கலந்து கொண்ட கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாரர் (நடவடிக்கை) திருமதி கல்யாணி ஹேவகே, டயலக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் (தொழில்நுட்பம்) திரு. தருஸ வணிகசேகர ஆகியோர்கள் கருத்து தெரிவித்தனர், அத்துடன் இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு நிலங்க ஜயவர்தன, அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திரு வடிவேல் சத்யானந்தன் மற்றும்  பொது முகாமையாளர் திரு பிரசன்ன முதலிகே ஆகியோர்கள் அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.      

WhatsApp Image 2023 11 29 at 12.12.11

WhatsApp Image 2023 11 29 at 12.12.06

சமீபத்திய செய்திகள்

Youtube