"தள ரல சவிய உலக மீனவர் தினம் - 2023” கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்களின் மீனவர் தின வாழ்த்துச் செய்தி.
பெரும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட அற்புதமான தீவூ வலுவான சமுத்திர பொருளாதாரத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். கடலை மட்டுமன்றி உள்நாட்டு நீர்த் தேக்கங்களால் வளப்படுத்தப்பட்ட எமது கடற்றொழிலின் ஊடாக தேசிய பொருளாதாரத்துக்கு ஆற்றும் பங்களிப்பு அற்பமானதல்ல. தற்போது கடற்றொழில் அமைச்சு என்ற வகையில் நாம் அக்கடமையை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
எமது கருத்துப்படி, உலக மீனவர் தினம் என்பது மற்றொறு கொண்டாட்டம் அல்ல, புதிய பயணத்தின் நோக்கமாகும். "தள ரல சவிய 2023” உலக மீனவர் தின வேலைத் திட்டங்களின் மூலம் நிரூபித்துள்ளோம். வெறும் நிகழ்ச்சி கொண்டாட்டங்களுக்குப் பதிலாக, மீனவர் தினத்தில் மீனவர்களின் உண்மையான பிரச்சனைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கி இயந்திரக் கடன், உருவாக்குவதற்கு இன்று நாம் வெற்றி கண்டுள்ளோம்.
நவம்பர் மாதத்தில் ஒதுக்கீட்டு சட்ட வரைபு தொடர்பான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியன் காரணமாக மீனவர் தின வேலைத் திட்டத்தல் எதிர்வரும் திசம்பர் மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மீனவ மக்களுக்கு நவீன மீன்பிடி தொழில்நுட்ப அறிவு வழங்கல், நன்னீர் மீன்பிடித் தொழில் மற்றும் கடலட்டை செய்கையை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வேலைத் திட்டங்கள் பல கடற்றொழில் அமைச்சினால் ஒழுங்கமைப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமக மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டறிய சந்தைக்கு, வாவிக்கு, கிராமத்துக்கு செல்வதற்கு நிறுவப்பட்ட நிறுவப்பட்ட கடற்றொழில் நடமாடும் சேவை இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீனவர் அடையாள அட்டை தயாரித்தல், படகு பதிவு செய்தல் போன்ற பிரச்சனைகளை மிக இலகுவாகத் தீர்ப்பதற்கு இதன் மூலம் யாழ்ப்பாண மீனவ மக்களுக்கு இடமளிக்க்கப்பட்டுள்ளது.
உலக மீனவர் தினத்தின் தேசிய வேலைத் திட்டத்துடன் இணைந்து கடற்றொழில் சாசனத்தை வெளியிடுதல், மீனவர் ஓய்வூதியம் ஒழுங்குவிதிகள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. இந்த வேலைத் திட்டங்கள் அனைத்தும் கடற்றொழில் அமைச்சர், டக்ளஸ் தேவானந்த அவர்களின் பூரண கண்காணிப்பு மற்றும் அனுசரணையின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. அமைச்சரின் தலைமையில் மீனவ குடும்பங்களின் பிள்ளைகளின் விசேட கலாச்சார மாநாடு யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவ தினத்தின் ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமல்லாது அதனை புதுப்பிக்கும் திட்டமாக மாற்றுவதே எமது நோக்கமாகும். வலுவான தொழிலாக நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பொருத்தமாக இருக்க வேண்டுமென்பதற்கு மீனவ சமுதாயத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கமைய இந்த மீனவர் தினத்தில் அதனை உறுதி கொள்வோம்.
"தள ரல சவிய - 2023” இன் கீழ் மீனவர் தினத்தில்; வழமையான வாழ்த்துக்களைத் தாண்டி, மீனவர்களின் வாழ்வை உண்மையாக மேம்படுத்தும் பல வேலைத் திட்டங்களை ஆரம்ப்பிப்பதற்கு தயாராகியுள்ளோம். எனபதை கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவ மக்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ….!