அமெரிக்க தூதுவர் திருமதி ஜ-லி ஸங்க் அவர்கள் 2023.11.29ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடற்றொழில் அமைச்சில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் மீன்பிடித் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்க அரசின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் கடலட்டை அடங்கலாக நீர்வாழின வளர்ப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் மீனவ மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அமெரிக்க அரசின் ஆதரவு அவசியமென கடற்றொழில் அமைச்சர் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்தார். இலங்கையின் மீன்பிடித் தொழிலை சர்வதேச மட்டத்தில் அபிவிருத்தி செய்வதற்குஇ அபிவிருத்தியடைந்த நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமென அமைச்சர் சுட்டிக் காட்டினார். தற்போதுள்ள சட்டதிட்டங்களைத் திருத்தி உலக உணவு அமைப்பின் ஆதரவுடன் புதிய சட்டம் உருவாக்கப்படும் என்றும், அதனை விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதனை ஏற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை கேட்டறிந்த அமெரிக்க தூதுவர், இலங்கையில் மீன்பிடித் துறையை மேம்படுத்துவதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் அமெரிக்கா வழங்கக்கூடிய அனைத்து உதவியையும் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இச்சந்சந்தர்ப்பதின்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.