உள்ளூர் ரின்மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுடன் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
தென் கடலில் இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான கடற்றொழில் நடவடிக்கையை முற்றாக நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.01.24ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட 'வினிவித பௌன்டேஷன்' ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (2023.01.20) இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு எஸ் ஜயசங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் இந்திய பல்தின படகுகள் மூலம் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல் மற்றும் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த தினம் தெற்கே கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து பாரப்பதற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அந்த விஜயத்தின் போது தென் மாகாண கடற்றொழில் துறைமுகங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா எனக் கண்டறிவதற்கு 2023.01.09ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார்
சமீபத்திய செய்திகள்
- அநீதி இருள் விலகி சமூகநீதி வெளிச்சம் பரவ தீபாவளி வழிவகுக்க வேண்டும். – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தீபாவளி வாழ்த்து செய்தி
- கடற்றொழில் துறைக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் 'Aqua Planet 2025' சர்வதேச கண்காட்சி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
- வடக்கு-கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு: ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கான விசேட செயற்றிட்டம்
- ධීවර වරාය සේවා නංවාලීමට කඩිනම් පියවර: 'කාර්යක්ෂම සේවාවක් අපේ ප්රමුඛතාවයයි' - අමාත්ය; 'මාස 6කින් පෙනෙන වෙනසක්' - නියෝජ්ය අමාත්ය
- මොනරාගල ධීවර ගැටලු විසඳීමට විශේෂ සම්බන්ධීකරණ හමුවක්: වනජීවී කලාපවල ධීවර දැල් එලීමේ කාලසීමාව දීර්ඝ කිරීමට අවධානය