“திறமையின்மை காரணமாக பின்னடைவு ஏற்பட்டிருந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய நவீனத்துவத்துக்கு ஏற்றவாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை மிக மகிழ்ச்சியளிக்கிறது. கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் விற்பனை நிலையங்கள் தற்போது உயர்ந்த தரத்துடன் நிறுவப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் பற்றி மீனவர்கள் மற்றும் நுகர்வோர் மனங்களில் இருக்கும் மோசமான பிம்பத்தை எம்மால் மாற்ற முடியும்”
அலவ்வ வாராந்த சந்தைக்கு எதிராக அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள் மேற்குறித்தவாறு கூறினார். 2023 செப்தம்பர் 21 ஆந் திகதி இந்த வைபவம் நடைபெற்றது.
மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்கள், தரமான மீன் உற்பத்திகளை சாதாரண விலையில் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை நுகர்வோர்களுக்கு வழங்குவதே தமது நோக்கமாகும்.
“நாம் புதிய விற்பனை நிலைய வலையமைப்பை தற்போது உருவாக்கி வருகிறோம்.. மேலும் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை இழந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்துக்குக்குச் சொந்தமான பழைய கடைகளின் தொகுதியை மீண்டும் புதுப்பித்து வருகிறோம். அலவ்வயில் நிரமாணித்துவரும் இக்கடை ஒரு சிறந்த உதாரணமாகும் அலவ்வயில் புதிய இடத்தில் புதிய முறையில் நாங்கள் வேலையை ஆரம்பித்தோம். இக்கடை வாடிக்கையாளர்களின் வசதிக்காக அனைத்து வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அலவ்வ வாராந்த சந்தைக்கு எதிரில் 177ஆம் இலக்க இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய மீன் விற்பனை நிலையத்தின் ஊடாக சாதாரண விலைக்கு, சரியான நிறையில்இ புதிய மீன்களை விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான இடத்தை இந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் உருவாக்கியுள்ளது. அனைத்து விலைகளையும் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.