en banner

DSC 0950

சர்வதேச மீனவ தினத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்றதுடன், இம்முறை இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடாத்துவது பொருத்தமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் முன்மொழிந்துள்ளார்.

அதற்கமைய  நவம்பர் மாதம் 15ஆந் திகதி வரை மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நடமாடும் சேவை அடங்கலாக வேறு பல வேலைத் திட்டங்கள் கடற்றொழில் அமைச்சு நடாத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன் நீர்வாழினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினால் நீர்வாழின செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான வேலைத் திட்டமும்இ நாரா நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும். சமுத்திர ஆய்வு நடவடிக்கை மற்றும் நீர்வாழின செய்கை ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல கருத்தரங்குகளும் நடாத்தப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் தெரிவித்தார். 

மேலும் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் மூலம் மீனவர்களுக்கு வைத்திய உதவிகள் நடாத்துவதற்கும். கடற்றொழில் தொழிலாளர்களுக்கிடையே மென்பந்து கிறிக்கட் போட்டி மற்றும் மீனவ பெண்களுக்கிடையே சேமிப்பு தொடர்பான கருத்தரங்குகளும் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் தெரிவித்தார். 

இந்த தீர்மானம் 2023.09.18ஆந் திகதி கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடந்த சர்வதேச மீனவர் தினம் பேருவளையில் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டதுடன், இங்கு பெறப்பட்ட அனுபவங்களுடன் இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு குறிப்பாக வட மாகாணத்தின் கலாச்சாரத்துக்கு அமைய நடாத்த வேண்டுமெனவும் இறுதி உத்தியோகபூர்வ வைபவம் யாழ் இந்து கலாச்சார நிலையத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமரின் உதவியுடன் நடாத்துவதற்கு திட்டமிட்;டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சமீபத்திய செய்திகள்

Youtube