அதிமேதகு ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க அவர்கள், கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கௌரவ கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம், கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தினால் கடற்றொழில் துறையின் நலன் கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்தை நீண்டகாலம் பாதுகாத்தும் முகாமைத்துவம் செய்தும் நிலைபேறான அறுவடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள 1996ம் ஆண்டின் 02ம் இலக்க கடற்றொழில் நீரியல் வளச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய கடற்றொழில் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை நிதர்சனமாக்குவதற்காக கடற்றொழிலுடன் தொடர்புடையவர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு இறுதி வரைபு தயாரிக்கப்பட்டு கௌரவ கடற்றொழில் அமைச்சரினால் விரைவில் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
ஆகவே குறிப்பிட்ட தரப்பினரின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 2023.10.15ம் திகதிக்கு முன்னர் கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அனுப்புமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.
இச்சட்டமூலம் தேவைப்படுவோர் கடற்றொழில் திணைக்களத்தின் https:/www.fisheriesdept.gov.lk எனும் இணையத் தளத்தில் அல்லது அனைத்து கடற்றொழில் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் அலவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.