ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹூங்கம ஹாத்தகல பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேச இறால் செய்கை செயற்றிட்டத்துக்கு காணி ஒதுக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2023.10.05ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சூழலுக்கு இணக்கமான செயற்றிட்டமாக பிரதேசத்தின் மக்களுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்குடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனயின் பேரில் Rainbow foods (Pvt) Ltd., KMN Aqua Services (Pvt) Ltd நிறுவனத்துடன் பெரிய அளவில் இறால் பண்ணை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேவையான பண்ணையை அமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேவையான காணியை ஒதுக்குவதற்கு அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் திரு. சீ.பீ. ரணசிங்க அவர்களை அழைத்து இவ்விடயத்தை கேட்டறிந்ததுடன் அதன்போது செயலாளர் தெரிவித்தபோது அரசின் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணி அளவூ ஹூங்கம ஹத்தான்கல பிரதேசத்தில் உள்ளதாகவூம் இந்த செயற்றிட்டத்துக்குத் தேவையான காணிகளை ஒதுக்க முடியும்.
இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் பெரும்பாலான பிரதேசங்களில் செயற்றிட்டத்துக்கு அரசின் காணியை முன்பதிவு செய்துள்ளவர்கள் அக்காணில் உரிய திட்டப் பணியை ஆரம்பித்துள்ளதுடன். சாலையை நிறுத்துவதற்கு மக்கள் அது சம்பந்தமான நம்பிக்கையை இழந்துள்ளதால் இவ்வாறான திட்டங்களுக்கு பொது மக்களல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த இறால் உட்கட்டமைப்புக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மேற்கொள்ளத் தவறினால், அதனை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்த அமைச்சர், இந்த செயற்றிட்டத்துக்குத் தேவையான தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் ஊடாக பிரதேசத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான திறன் கிடைக்குமெனவும் மேலும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் திருமதி என்.சீ.பீ. ரணசிங்க அமைச்சின் உயர் அதிகாரிகளும், இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிக்கும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.