இலங்கையில் அலங்கார மீன் தொழில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பெறுமதி வாய்ந்த தொழிலாகவும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் அதற்குப் பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.10.07ஆந் திகதி பொரளையில் தப்ரபோன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் மிகப் பெரிய அலங்கார மீன் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.
இக்கண்காட்சி அக்குவா பிஸ்டா (Aqua fiesta) எனும் பெயரில் அறிமுகப்படுகpறது. இங்கு கண்காட்சிய நடாத்துவதற்கு ஏற்பாட்டாளரான சமிலா ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் கடும் முயற்சி எடுத்துள்ளதாகவும், அதற்கு நக்டா நிறுவனத்தின் ஒத்துழைப்பு வழங்கியது தொடர்பாக ஏனைய தனியார் நிறுவனங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக இங்கு வந்திருந்த திரு பிரமோவ் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் தற்போது அலங்கார மீன் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கும் ஆதரவை வழங்கியதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அவர்களின் தேவைகள் என்ன என்பதைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்
அத்துடன் நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அலங்கார மீன்கள் உள்ளிட்ட நன்னீர் மீன் செய்கைத் தொழிலை மேம்படுத்துவதற்கு ரூபா 100 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த பணத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய செயற்றிட்டங்களை அபிவிருத்தி செய்யும் பணியை நக்டா நிறுவனம் தற்போது மேற் கொண்டு வருகின்றது. இந்த செயற்றிட்டங்கள் அனைத்தும் கடற்றொழில் அமைச்சரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு தேவையான அறிவூறுத்தல் வழங்கப்படுவதாக தெரிவித்தார். இக்கண்காட்சி மற்றும் சந்தை ஏற்பாடு மேற்கொள்வதன் மூலம் இந்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் முதலீட்டாளர்களை ஈர்க்க முடியுமெனவும் தெரிவித்த அமைச்சர், இந்த செயற்பாட்டை ஏற்பாடு செய்தமைக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அரச பல்கலைக் கழகங்களின் உயிரியல் பிரிவு பேராசிரியர்கள் பலரும், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, நக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி அசோக்க மற்றும் இக்கண்கட்சியை ஏற்பாடு செய்த தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.