en banner

WhatsApp Image 2023 10 04 at 11.31.12 AM 1

இலங்கையில் மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்கு இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீட்டுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் திரு சத்யஞ்சல் பாண்டே அவர்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசுடன் தொடர்புடைய மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளும் அறிஞர்கள் குழுவொன்று கடந்த 23ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், நாரா நிறுவனம் நக்டா ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு வார காலத்துக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள 15 மீனவ மாவட்டங்களுக்கும், நன்னீர் துறை சார்ந்த மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்து அவர்களால் பெறப்பட்ட தரவுகள் மற்றும் அவதானிப்புகள் தொடர்பான அறிக்கை 2023.10.02ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இங்கு அவர்கள் இலங்கையின் மீன் வளங்களை மேம்படுத்துவதற்கு முக்கியமாக கூடுகளுக்குள் மீன் வளர்ப்பதற்கு மேற்கொள்ளும் வழிமுறைகளை மேம்படுத்துவதற்கும் இறால், கடலட்டை போன்ற செய்கையை மேம்படுத்தல், இனப் பெருக்க நிலையங்களை அமைப்பது  தொடர்பாக எடுக்க வேண்டிய வழிமுறைகளய் பற்றிய நீண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும் ஆட்டியமியா செய்கையை நிறுவுவதற்கு இந்திய வழங்கிய உதவி உபகாரங்கள் குறித்தும் அந்த பிரதிநிதிகளின் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. முக்கியமாக மேல் மாகாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மீன்பிடி நடவடிக்கையை விருத்தி செய்வதற்குத் தேவையான திட்டங்களை முன்வைக்குமாறும் அப்பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மீன் செய்கையை  அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது தொடர்பாகவும்  அப்பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.

அலங்கார மீன் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அலங்கார மீன் வளர்ப்பின் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமெனவும் அத்தூதுக்குழு சுட்டிக் காட்டினார்.

இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்திய நிபுணர் குழு இலங்கையில் மேற்கொண்ட இந்த அவதானிப்புகள் மிக முக்கியமானவை எனவும், இதற்கமைய நக்டா மற்றும் நாரா  நிறுவனங்கள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீட்டுடன் இந்திய அறிஞர்களின் அவதானிப்பு அறிக்கையின் அடிப்படையில் இது தொடர்பான திட்டங்கள் விரைவில் தயாரித்து விரைவில் செயற்படுத்துவதற்கு இந்திய அரசிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு இந்த அறிக்கையை இந்திய அறிஞர்கள் குழுவைச் சேர்ந்த கலாநிதி பாப்லி மற்றும் கலாநிதி கௌதம் ஆகியோர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷ்ஷங்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, பிரதி உயர்ஸ்தானிகர் திரு சத்யஞ்சல் பாண்டே, கடற்றொழல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருதி அசோக்கா, நாரா நிறுவனத்தின் தலைவர் அடங்கலாக பல உயர்அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube