சிலாபம் பிரதேசத்தின் பல மீனவ அமைப்புகள் 2023.09.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது பிரதேசத்துக்குள் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல விடயங்களை முன்வைத்தனர்.
இங்கு சிலாபம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள இறால் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் சிலாபம் வைத்தியசாலையில் இருந்தும் வெளியேற்றப்படும் சிகிச்சை கழிவுப் பொருட்கள் சிலாபம் கடனீரேரியை பாரியளவில் மாசடைவடையச் செய்வதோடு மீன் வளங்களும் அழிந்து வருவதாக இந்த மீனவர்கள் அமைச்சரிடம் சுட்டிக் காட்டினர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் செய்தபோது கடனீரேரியை சுத்தப்படுத்தப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியபோதிலும், அது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட வில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இங்கு இவ்விடயங்களை கவனத்திற் கொண்ட அமைச்சர், சிலாபம் வைத்தியசாலையில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாகவும், மருத்துவ கழிவுகள் அகற்றப்பட மாட்டாதென தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு மீனவர் குழு அந்த அறிக்கையை ஏற்கவில்லைஇ அத்துடன் இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சரிடம் தெரிவித்ததுடன், கடனீரேரியை சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளால் நியமிக்கப்பட்ட குழு பல தடவைகள் கூடி சில தீர்மானங்களை எடுத்து செயற்படுத்தி வருவதாகவும், அடுத்த குழுக் கூட்டத்துக்கு இந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளையும் அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த தினங்களில் மீனவர்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட மண்ணெண்னெய் தமது பிரதேசத்தின் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என மீனவ பிரதிநிதிகள் சுட்டிக் காட்டியதுடன் இது தொடர்பாக இதனை அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், எதிர்வரும் நாட்களுக்குள் எரிபொருள் கிடைக்காத மீனவர்களுக்கு முதற்; சுற்று எரிபொருளுடன் 150 லிற்றர் மண்ணெண்னெய் வழங்கப்படுமெனவும், முதற் சுற்று எரிபொருள் பெற்ற மீனவர்களுக்கு 75 லிற்றர் வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் எரிபொருள் வழங்கப்படாது இன்னும் 29,057 படகுகள் இருப்பதாகவும், எதிர்வரும் நாட்களில் அந்த மீதிப் படகுகளுக்கும் எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிலாபம் கடனீரேரியில் 237 இறால் பண்ணைகள் உள்ளதாகவும், இவற்றில் இருந்து கடனீரேரிக்குள் கழிவு நீர் விடப்படுவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நிமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு தற்போது 218 பண்ணைகளை அவதானித்துள்ளதாகவும் எஞ்சிய தொகையை அவதானித்த பின் வழங்கப்படும் அறிக்கையின் பிரகாரம் 04 நாட்களுக்குள் கழிவூ நீரை தவறாக வெளியேற்றும் பண்ணைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதேசத்தில் கரைவலைத் தொழிலை மேற்கொள்ளும் சிலர் சட்ட விரோதமாக வின்ச் முறையின் மூலம் கடற்கரையை சேதப்படுத்தி வரும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரியதுடன், அதற்கு அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் புத்தளம் மாவட்டத்தின் கடற் பிரதேசங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் தெரிவித்த மீனவர்கள்இ தமக்கும் அக்கப்பல் கம்பனியின் காப்புறுதி கம்பனியிடமிருந்து பெறப்பட்ட இழப்பீட்டு தொகை தமக்கும் வழங்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். இவ்விடயங்கள் தொடர்பாக தான் மீபா (MEPA) மற்றும் நாரா (NARA) ஆகிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இந்திய கடலடி இழுவைப் படகின் மூலம் சிலாபம், கற்பிட்டி மற்றும் பத்தலங்குண்டு ஆகிய பிரதேசங்களில் மீன் வளங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்த மீனவர்கள், இதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டதுடன், இதுகுறித்து இன்று மேன்மதங்கிய ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, நக்டா மற்றும் நாரா நிறுவனங்களின் பணிப்பாளர்கள் அடங்கலாக பல உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.