en banner

lZIzp2DzcZgRU7OVAA world fisheries day

2023 நவம்பர் 21ஆந் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மீனவர் தினம், கடற்றொழில் அமைச்சினால் ஒவ்வொரு வருடமும் இந்நாட்டு மீனவர்களை ஒன்று திரட்டி, மிக வெற்றிகரமாக நடாத்தி நடாத்தி வருகிறது. இம்முறை மீனவர் தினத்தின் கருப்பொருளாக “ஆரோக்கியமான கடல் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதான முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி மற்றும் உலகின் நிலையான மீன்வளத்தை உறுதிப்படுத்தல்” எனும் தலைப்பாக உள்ளது.

2023 நவம்பர் 21ஆந் திகதி அன்று சர்வதேச மீனவர் தினத்திற்கு அனுசரனையாக சித்திரப் போட்டி ஒன்றை நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கடற்றொழில் துறை சார்ந்த மக்களின் கருத்துக்களை விரிவுபடுத்துவதுடன், பாடசாலைகளுக்குள் மீன்பிடி அமைப்பின் பிரதான முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்கும், மாணவர்களுக்கிடையில் மீன்பிடித் துறைக்குள்ள ஆக்கபூர்வமான சிந்தனைகளை மெருகூட்டுவதே இந்த சித்திரப் போட்டியின் நோக்கமாகும்.

இந்தப் போட்டிக்கு 8ஆம் தரத்திலிருந்து 12ஆம் தரம் வரையான பாடசாலை மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். "கடல் எமக்கு ஒரு வளமாகும்", "மீனவர்களின் வாழ்க்கை" மற்றும் "எமது மீனவர்கள்" எனும் தலைப்பிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் எதை உணர்கிறீர்கள் என்பதை கற்பனை செய்து வடிவமைப்பை வழங்குவதான் மூலம் இந்த வாய்ப்பினை பெறுவீர்கள்.

இப்போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு முறையே ரூபா 75,000/-- மும் ரூபா 50,000/-- மும் மற்றும் ரூபா 25000/- பரிசு வழங்கப்படும், மேலும் ரூபா 5,000/ வீதம் 10 வெகுமதிகளும், ரூபா 1,000/- வீதம் 10 திறமைக்கான விருதுகளும் வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த சித்திரப் போட்டி தொடர்பாக கல்வி அமைச்சு, வெகுசன அமைச்சு மற்றும் சமூக ஊடகங்களும் இதற்கு அனுசரனை வழங்குகின்றது.

இந்தப் படைப்புகளை ஏற்றுக் கொள்ளப்படும் கடைசித் திகதி 2023 நவம்பர் 05ஆந் திகதியாகும். எனவே அதற்கு முன்னர் கடற்றொழில் அமைச்சு, புதிய செயலகம், மாளிகவத்தை, கொழும்பு 10” எனும் முகவரிக்கு இப்படைப்புகளை அனுப்புதல் வேண்டும். அத்துடன் சித்திரத்தை அனுப்பும் கடித உறையில் அல்லது பொதியின் இடது பக்க மேல் மூலையில் (சர்வதேச மீனவர் தின சித்திரப் போட்டி – 2023) எனக் குறிப்பிடல் வேண்டும்.

விண்ணப்பங்களை கடற்றொழில் அமைச்சின் www.fisheries.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அனுப்பவும். 011-2434326  எனும் தொலையில் அழைத்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம.      

சமீபத்திய செய்திகள்

Youtube