கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.09.10ஆந் திகதி பேலியாகொட மீன் விற்பனை சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்
இங்கு தற்போது பணி நிறைவூ செய்யப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையத்தில் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து பார்த்ததுடன், விற்பனை சந்தைத் தொகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீரினால் சுற்றுப்புற சூழலுக்கு கேடு ஏற்படுவதாக எழுந்த முறைப்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் விசாரித்துப் பார்த்த அமைச்சர் இவ்வாறான கழிவு நீர் வெளியேறுகின்றதா என்பது பற்றி விசாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் விற்பனை தொகுதியில் அதிகளவில் நாய்கள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் அவைகளுக்கு கருத்தடை செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் பேலியகொட பிரதேச சபை செயலாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
பேலியாகொட சந்தைக்கு பனிக்கட்டி வழங்கும்போது ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள் குறி;த்தும் கலந்துரையாடிய அமைச்சர், விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பிலும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். மீன் சந்தைத் தொகுதியில் கிருமிநாசினி தௌpப்பது பற்றியும் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்வது பற்றியும் முறையாக பொது மருத்துவ பரிசோதகர் நாளாந்தம் பரிசோதனை செய்து, அச்செயலை மேற்கொள்ளும் வியாபாரிகள் மற்றும் தொடர்புபட்ட பொறுப்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இவ்வாறான தவறுகளைச் செய்யும் வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, பேலியாகொட பிரதேச சபையின் செயலாளர் அடங்கலாக அதிகாரிகள் பலரும், சந்தைத் தொகுதியின் பிரிதநிதிகளும் கலந்து கொண்டனர்.