en banner

DSC 0576 1

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு பெரும் பணியை மேற்கொண்டு வருவதாக 2023.12.14ஆந் திகதி சீநோர் நிறுவனத்தின் மட்டக்குளிய படகுத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவூ மற்றும் விவசாய அமைப்பினால் நோர்வே அரசின் உதவியுடன் இலங்கையில் மீனவர்களின் பாதுகாப்புக்காக 6.3 மீற்றர் மற்றும் 07 மீற்றர் அகலமுடைய SL 20 மற்றும் SL 23 ஆகிய இரு மீன்பிடிப் படகுகள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு அவற்றை கடற்றொழில் அமைச்சுக்கும், மீன் விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கும், நவீன தொழில்நுட்பம் கொண்ட 30 சில்லறை விற்பனை கூடங்கள் உருவாக்கப்பட்டு விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்காகவும், 25 தெப்பங்கள் உற்பத்தி செய்து அவற்றை கடற்றொழில் அமைச்சுக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த இரு படகுகளும் மிக நுணுக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், மிக இலகுவான நார்ப் பொருளினால் தயாரிக்கப்பட்டுள்ளதால் வசதியான முறையில் மீனவர்கள் தொழிலில் ஈடுபடக்கூடிய நிலையில் உள்ளது. இந்த இரு படகுகளும் சீநோர் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதனை எதிர்காலத்தில் தயாரிக்கப்பட்டு மீனவர்களுக்கிடையில் பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும். 

மேலும் மீன் சில்லறை விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ள விற்பனைகூடங்களால் சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்து .இளையான் மற்றும் சூரிய ஒளியிலிருந்து தடுத்து மீன்களை மக்களுக்கு சிறந்த தரமான மீன்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமெனவும், எதிர்காலங்களில் இந்த விற்பனைகூடங்களை நாடு முழுவதும் விற்பனையாளர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FAO அமைப்பின் ஒத்துழைப்புடன், சீனோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இப்படகு மற்றும் மீன் விற்பனைகூடங்கள் எமது மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன் விற்பனைகூடங்களின் தரத்தையும் மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும் என அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இணைந்து வேலை செய்வதால் பெரும் வேலைப் பகுதியை நாட்டில் இலகுவாக மேற்கொள்ள முடியூமெனவும், FAO அமைப்பு, நோர்வே நிறுவனம், நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையினால் மீனவ மக்களுக்கு பெரும் சேவையாற்ற முடியுமென கடற்றொழில் ராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த அவர்கள் தனது கருத்தில தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த மற்றும் FAO அமைப்பின் இந்நாட்டு பிரதிநிதி திரு நளின் முணசிங்க ஆகியோர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.    இந்நிகழ்வில் சீனோர் நிறுவனத்தினதும் FAO அமைப்பினதும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

DSC 0670 1

DSC 0639 1

சமீபத்திய செய்திகள்

Youtube