en banner

DSC 0419 1 12023.12.13ஆந் திகதி நாரா நிறுவனத்தில் நடைபெற்ற “இலங்கையின் பொருளாதார வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான மீன்பிடி நடவடிக்கை” எனும் கருப்பொருளின் கீழ் நாரா நிறுவனத்தில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் வருடாந்த பருவ அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ மீனவ மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு நாரா நிறுவனத்தில் சேவையாற்றும் விஞ்ஞானிகளின் இந்த பயிற்சிப் பட்டறையின் ஊடாக கலந்துரையாடுவது முக்கியமான விடயமெனவூம் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு நாரா நிறுவன விஞ்ஞானிகள் பெரும் பங்காற்ற முடியுமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மீனவ மக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களுக்குத் தேவையான விஞ்ஞான ரீதியிலான வழிகாட்டல் மற்றும் தரவினைக் கண்டறிதல் நாரா நிறுவனத்தின் பொறுப்பெனவும் இதற்கு புத்தளம், கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நாரா நிறுவனத்தின் பிரதேச ஆய்வு நிலையங்களின் ஊடாக இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.

நாரா நிறுவனம் கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் ஆய்வூ நிறுவனம் ஒன்றாக பல நோக்கங்களை செயற்படுத்துவதாகவும் நாரா நிறுவனத்துக்குரிய பிரதேச ஆய்வு மையங்கள் அடங்கலாக இந்த நிறுவனத்தின் ஏனைய பிரிவூகளின் அனைத்து ஆதரவுடன் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பணியாற்றி வருவதாகவும், மேலும் மீன்பிடித் துறையில் மற்றும் சமுத்திர துறையில் தோன்றும் சுற்றுச் சூழல் பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதும் இந்த நிறுவனத்தின் பொறுப்பாகும் எனக் கூறிய அமைச்சர், மீனவ மக்களின் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்கு எதிர்வரும் ஆண்டில் நாட்டில் உள்ள இத்தகைய ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை முதன்மைப்படுத்தி தேவையான ஆய்வூத் திட்டங்களைத் தயாரிப்பது நாரா நிறுவனத்தின் பொறுப்பு எனவும், இதற்கு கடற்றொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வகையில் தானும் தனது அமைச்சிலுள்ள சகல நிறுவனங்களும் ஆதரவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிசாந்த அவர்கள் கூறியபோது, அமைச்சல் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் மூலம் மீன்பிடித் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைய முடியும் என்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் சீன அரசாங்கத்தைச் சேர்ந்த ஆய்வாரள்கள் மற்றும் அமெரிக்க ஐக்கிய குடியரசின் ஆய்வாளர்களும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, நாரா நிறுவனத்தின் தலைவர் திரு விஜேரத்ண, பணிப்பாளர் நாயகம் கலாநிதி கமல் தென்னக்கோண் ஆகியோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொணடனர்.

DSC 0470

DSC 0421

சமீபத்திய செய்திகள்

Youtube