ஏத்தனை விமர்சனங்கள் முன்வைத்தாலும், சமுத்திர வளங்களைப் பாதுகாப்பதற்கு மற்றும் மீனவர்களின் பாதுகாப்புக்காக புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகளின் வரைபு மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர், புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகள் தொடர்பாக கிளிநொச்சியில் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் சந்தர்ப்பத்தின்போது கலந்து கொண்டு இங்கு இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், வெளிநாட்டு மீன்பிடி படகுளுக்கு, இலங்கை கடற் பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இந்க ஒழுங்குவிதிகளின் வரைபின் மூலம் இடமளிக்கப்படுமெனவும்வு சில தரப்பினர் மீனவர்களைத் தவறாக வழிநடத்துகின்றனர் எனவும்; தெரிவித்தார்.
1979இன் ஒழுங்குவிதிகள் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு இந்நாட்டு கடற் பரப்பில் மீன் பிடிக்கக்கூடியவாறு தயாரிக்கப்பட்டுள்ளதாகவுவம், இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை விமர்சிக்கும் சிலருக்குத் தெரியாது, அவை திருத்தப்பட்டு, புதிய ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்படுமெனவும், அதில் உள்ள விடயங்கள் கவனமாக பரிசீலித்த பின் அதற்கு தனது அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
அந்நிய பொருளாதார வலயத்தில் கடல் வளங்களின் உரிமை எமது மீனவ மக்களுக்கு உரித்துடையதாக இருத்தல் வேண்டுமெனவும், புதிய சட்டத்தின் மூலம் இந்நாட்டு கடல் வளங்களை வெளி நாடுகளுக்கு வளங்குவதற்கு தான் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஒருபோதும் செயற்படப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது பூநகரி பிரதேச செயலகத்தின் செயலாளர், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் அதிகாரிகள், கண்டாவளை, பூநகரி, பளை ஆகிய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.