தேசிய ரின்மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின்மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று முதல் (11.02.2024) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
2024ம் ஆண்டில் நன்னீர் கடற்றொழில் துறையை கட்டியெழுப்புவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பிரகாரம் கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (நக்டா) தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக இன்று (10.01.2024) கடற்றொழில் அமைச்சு மற்றும் நக்டா அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இலங்கையில் மீன்பிடிக் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு பெரும் பணியை மேற்கொண்டு வருவதாக 2023.12.14ஆந் திகதி சீநோர் நிறுவனத்தின் மட்டக்குளிய படகுத் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

2024.01.01ஆந் திகதி கடற்றொழில் அமைச்சின் புதிய வருடத்துக்கான வேலைகளை ஆரம்பிக்கும் வைபவத்தில் பிரதான அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
2023.12.13ஆந் திகதி நாரா நிறுவனத்தில் நடைபெற்ற “இலங்கையின் பொருளாதார வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான மீன்பிடி நடவடிக்கை” எனும் கருப்பொருளின் கீழ் நாரா நிறுவனத்தில் நடைபெற்ற விஞ்ஞானிகளின் வருடாந்த பருவ அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்இ மீனவ மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு நாரா நிறுவனத்தில் சேவையாற்றும் விஞ்ஞானிகளின் இந்த பயிற்சிப் பட்டறையின் ஊடாக கலந்துரையாடுவது முக்கியமான விடயமெனவூம் கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கு மற்றும் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு நாரா நிறுவன விஞ்ஞானிகள் பெரும் பங்காற்ற முடியுமென தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகள்
- අගය එකතු කළ මත්ස්ය අපනයනය සඳහා චීන තාක්ෂණික සහය: නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේ ෂෙන්සෙන් නියෝජිතයින් හමුවෙයි
- ගංවතුරෙන් විපතට පත් ධීවර සංස්ථා සේවකයින්ට සහ යටිතල පහසුකම් සඳහා කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් නියෝග
- ගංවතුරෙන් මත්ස්ය සැකසුම් කර්මාන්තශාලා 15කට හානි: අපනයනකරුවන්ට කඩිනම් සහන ලබා දීමට නියෝජ්ය අමාත්ය රත්න ගමගේගෙන් පොරොන්දුවක්
- யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை - உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்
- பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் வழிநடத்தலில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மீன்பிடிப் படகுகள் உடனடியாக அனுப்பி வைப்பு!





