கடற்றொழில் அமைச்சரினால் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் புதிய கடற்றொழில் சட்டம் இலங்கையில் மீன்பிடி தொழிலுக்கு சர்வதேச நிலைக்கு மேம்படுத்துவதற்கு,
தற்போது செயற்படுத்திவரும் சட்டத்தின் குறைபாடுகள் அனைத்தையும் திருத்தி இந்நாட்டு மீனவ மக்களின் முன்னேற்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட சட்டமாகும் எனவும், இந்த வரைவு மீனவ மக்களுக்கு மத்தியில் கொண்டு சென்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்களையும் பெற்று அவற்றையும் அதில் உள்ளடக்கப்பட்டு புதிய சட்டத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதனை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடைமுறைகளைத் தயாரிப்பது 15 கடற்றொழில் மாவட்டங்களில் இருக்கும் கடற்றொழில் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களின் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2024.02.12ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நிகழ்நிலை (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கடற்றொழில் மாவட்ட உதவிப் பணிப்பாளர்களின் கூட்டத்தின்போது இதனைத் தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இக்கூட்டம் நடாத்துவதற்கு அனைத்து உதவிப் பணிப்பாளர்களையூம் கொழும்புக்கு அழைப்பதற்கான கருத்தைக் கொண்டிருப்பினும், செலவினங்கள கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் முன்னுரிமை காரணமாக நிகழ்நிலை (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக நடாத்தப்படுவதாகவும், எதிர்வரும் 19ஆந் திகதி மீண்டும் உதவிப் பணிப்பாளர்கள் யாவரும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடி இந்த சட்டம் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இங்கு தற்போது கடற்றொழில் மாவட்டங்களில் முகாமைத்துவ குழுக்களை அமைத்து மாவட்ட மட்டத்தில் தோன்றும் முகாமைத்துவ பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, தயாரிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ ஒழுங்குவிதிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த முகாமைத்துவ ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டது புலம்பெயர்ந்த மீனவர்கள் காரணமாக பல மீனவ மாவட்டங்களில் மீனவர்களுக்குத் தோன்றியுள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கென சுட்டிக் காட்டிய அமைச்சர், இது தொடர்பாக உதவிப் பணிப்பாளர்களின் கருத்துக்களை அறிந்து, அதற்கமைய உதவிப் பணிப்பாளர்களால் சமர்ப்பிக்கப்படும் விடயங்களையும் உள்வாங்கி இந்த ஒழுங்குவிதியினை தயாரிக்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.