
யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் 2025.09.18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திச் செயல்பாட்டில் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதன் முற்போக்கு ஆய்வுக் கூட்டம் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் செப்டம்பர் 16 ஆம் திகதி அந்த அதிகார சபையின் வளாகத்தில் நடைபெற்றது.
நாட்டின் பிரதான மீன் விநியோக மையமான பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இன்று (12) குறித்த வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டதுடன், வர்த்தக சமூகத்தினருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினார்.

இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர், ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (15) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களுக்கும், இலங்கைக்கான மாலைத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் (H.E Masood Imad) அவர்களுக்கும் இடையிலான சுமூகமான சந்திப்பொன்று செப்டம்பர் 8ம் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





