
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிகழ்வு கத்துலுவ குருக்கந்த படகுத்துறையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் 2025 வரவு செலவுத் திட்ட விவாத உரையின்போது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, மீன்வளத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து சுட்டிக்காட்டினார், இது நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பைக் எடுத்துக்காட்டுவதாக தெரிவித்தார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த (28) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

ஐரோப்பிய ஆணையத்தின் கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்திற்கான இயக்குநரகத்தின் (DG MARE) பிரதிநிதிகள் குழு, பிப்ரவரி 13, 2025 அன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் திரு. ராமலிங்கம் சந்திரசேகரை அமைச்சகத்தில் சந்தித்தனர்.
சமீபத்திய செய்திகள்
- திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு 226 மில்லியன் ரூபா நிவாரணம்; கைத்தொழிலை இரண்டு மடங்காக மேம்படுத்த அரசாங்கத்திடமிருந்து துரித திட்டம்
- அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறையை மீளக்கட்டியெழுப்ப வியட்நாம் தூதுவர் உறுதி; அலங்கார மீன் மற்றும் இறால் பண்ணைத்துறைகளுக்கு விசேட கவனம்
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் மாற்றத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கிறது
- தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துவருவது தெளிவாகப் பிரதிபலிப்பதாகஅவுஸ்திரேலிய தூதுவர் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் தெரிவிப்பு
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து செய்தி





