en banner

lZIzp2DzcZgRU7OVAA world fisheries day

2023 நவம்பர் 21ஆந் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மீனவர் தினம், கடற்றொழில் அமைச்சினால் ஒவ்வொரு வருடமும் இந்நாட்டு மீனவர்களை ஒன்று திரட்டி, மிக வெற்றிகரமாக நடாத்தி நடாத்தி வருகிறது. இம்முறை மீனவர் தினத்தின் கருப்பொருளாக “ஆரோக்கியமான கடல் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதான முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி மற்றும் உலகின் நிலையான மீன்வளத்தை உறுதிப்படுத்தல்” எனும் தலைப்பாக உள்ளது.

WhatsApp Image 2023 10 07 at 2.25.13 PM 1

இலங்கையில் அலங்கார மீன் தொழில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பெறுமதி வாய்ந்த தொழிலாகவும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் அதற்குப் பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.10.07ஆந் திகதி பொரளையில் தப்ரபோன் மண்டபத்தில் நடைபெற்ற  இலங்கையின் மிகப் பெரிய அலங்கார மீன் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

WhatsApp Image 2023 10 04 at 11.31.12 AM 1

இலங்கையில் மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்கு இந்திய உயர்ஸ்தானிகரின் தலையீட்டுடன் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் திரு சத்யஞ்சல் பாண்டே அவர்களுடன் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசுடன் தொடர்புடைய மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளும் அறிஞர்கள் குழுவொன்று கடந்த 23ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், நாரா நிறுவனம் நக்டா ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் ஒரு வார காலத்துக்கும் மேலாக இலங்கை முழுவதிலுமுள்ள 15 மீனவ மாவட்டங்களுக்கும், நன்னீர் துறை சார்ந்த மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்து அவர்களால் பெறப்பட்ட தரவுகள் மற்றும் அவதானிப்புகள் தொடர்பான அறிக்கை 2023.10.02ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலான உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

WhatsApp Image 2023 10 05 at 12.57.21 PM

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹூங்கம ஹாத்தகல பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேச இறால் செய்கை செயற்றிட்டத்துக்கு காணி ஒதுக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2023.10.05ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

WhatsApp Image 2023 09 22 at 15.53.32

“திறமையின்மை காரணமாக பின்னடைவு ஏற்பட்டிருந்த இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தற்போதைய நவீனத்துவத்துக்கு ஏற்றவாறு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை மிக மகிழ்ச்சியளிக்கிறது. கடற்றொழில் கூட்டுத்தாபன மீன் விற்பனை நிலையங்கள் தற்போது உயர்ந்த தரத்துடன் நிறுவப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் பற்றி மீனவர்கள் மற்றும் நுகர்வோர் மனங்களில் இருக்கும் மோசமான பிம்பத்தை எம்மால் மாற்ற முடியும்”

சமீபத்திய செய்திகள்

Youtube