en banner

DVXzPiEX4AAknvJ

அதிமேதகு ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்க அவர்கள், கௌரவ கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கௌரவ கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பிரகாரம், கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளத் திணைக்களத்தினால் கடற்றொழில் துறையின் நலன் கருதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்தை நீண்டகாலம் பாதுகாத்தும் முகாமைத்துவம் செய்தும் நிலைபேறான அறுவடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடைமுறையிலுள்ள 1996ம் ஆண்டின் 02ம் இலக்க கடற்றொழில் நீரியல் வளச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து, புதிய கடற்றொழில் சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

DSC 0950

சர்வதேச மீனவ தினத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆந் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்றதுடன், இம்முறை இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடாத்துவது பொருத்தமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த அவர்கள் முன்மொழிந்துள்ளார்.

Untitledகடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.09.10ஆந் திகதி பேலியாகொட மீன் விற்பனை சந்தைத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை அவதானிப்பதற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்

DSC 1068

சிலாபம் பிரதேசத்தின் பல மீனவ அமைப்புகள் 2023.09.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமது பிரதேசத்துக்குள் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக பல விடயங்களை முன்வைத்தனர். 

douglas

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தின் ககருவாடு பதனிடும் தொழிலில் ஈடுபடும் மீனவ குழுவினர் 2023.09.04ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து, தமது தொழிலுக்கு இக்கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube