சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு இன்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்