en banner

WhatsApp Image 2025 08 23 at 08.45.10

இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழில் துறையின் நிலைபேறானதன்மைக்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, விரிவானதும் ஒன்றிணைந்ததுமான செயற்றிட்டமொன்றை முன்னெடுக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

OIPவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீனவ சமூகம் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரு முக்கிய படியாக, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,127.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 08 19 at 18.02.12

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், இலங்கைக்கான நெதர்லாந்தின் துணைத் தூதுவர் ஐவன் ரட்ஜன்ஸ் (Iwan Rutjens) அவர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் விசேட சந்திப்பொன்று இன்று (19) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களும் கலந்துகொண்டார்.

WhatsApp Image 2025 08 20 at 09.34.20ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) நிதிப் பங்களிப்பின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் நீரியல் வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட 'தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம்' (Technical Cooperation Project) வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட கருத்தரங்கொன்று நேற்று (2025 ஆகஸ்ட் 19) அம்பாறையில் நடைபெற்றது.

WhatsApp Image 2025 08 14 at 20.38.55 1

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில், கடற்றொழில் சமூகத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்குடன் ‘சயுர’ விசேட ஆயுள் காப்புறுதித் திட்டம் இன்று (ஆகஸ்ட் 14) குடாவெல்லையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

Youtube