இந்நாட்டு மீன்பிடித் தொழிலில ஈடுபடும் பன்னாள் மீன்பிடிப் படகுகளுக்கு சலுகை விலையில் எரிபொருள் வழங்குவதற்குத் தேவையான வேலைத் திட்டம் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா மற்றும் IOC கம்பனியின் பிரதிநிதிகளுக்கிடையில் 2023.11.27ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
ஏத்தனை விமர்சனங்கள் முன்வைத்தாலும், சமுத்திர வளங்களைப் பாதுகாப்பதற்கு மற்றும் மீனவர்களின் பாதுகாப்புக்காக புதிய கடற்றொழில் ஒழுங்குவிதிகளின் வரைபு மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தின் நிலப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனைக்கு 15 கடைகள் சிலாபம் நகரத்தில் மீனவ சங்கத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கும் வைபவம் 2023.11.17ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
"தள ரல சவிய உலக மீனவர் தினம் - 2023” கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஷாந்த த சில்வா அவர்களின் மீனவர் தின வாழ்த்துச் செய்தி.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் H.E MIZUKOSHI HIDEAKI அவர்கள் 2023.11.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 435 மில்லியன் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையை டிஜிட்டல்மயமாக்க IOM இடமிருந்து 50 TAB கருவிகள்: கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை
- மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசியப் பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
- இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
- கடல் வளங்களைப் பாதுகாத்து, கரைவலை மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
- ஏற்றுமதி வருவாயை அதிகரிக்க கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் புதிய திட்டம்