
2026.01.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவுள்ள கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப்பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அனுமதி வழங்கப்பட்டன.

நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

பேரிடரால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து மீண்டெழுவதற்கு நாம் தீவிரமாக முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். இருந்த நிலையைவிட சிறந்த நிலைக்கு செல்வோம். அதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

"எமது இலக்கு, மீனவ சமூகத்திற்கு சுபீட்சத்தையும் கௌரவத்தையும் பெற்றுத் தரும் ஒரு வளமான எதிர்காலமாகும்"

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





