en banner

WhatsApp Image 2025 06 27 at 17.51.36

கடற்றொழில், நீரியல்  மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச அவர்களின் தலைமையில்  உத்தியோகபூர்வ பிரான்ஸ்  விஜயத்தை மேற்கொண்ட தூதுக்குழுவின் மூன்றாம் நாளில் சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு முக்கியமான நிறுவனங்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கலந்துரையாடல்கள் தற்போதைய ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Concarneau, Brestஇல் அமைந்துள்ள பிரெஞ்சு தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்குச் சென்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவினர், அங்கு நிலையத்தின் தலைவர் கலாநிதி Guillaume Massé அவர்களுடன் சுமூகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டனர். இதன்போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள்:

இலங்கையில் ஒரு விசேட அருங்காட்சியகக் கண்காட்சியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.

சமுத்திர மீன்வளப் பயிற்சியை மையமாகக் கொண்ட பரிமாற்றத் திட்டங்களை ஆரம்பித்தல்.

கடல் அட்டை மற்றும் கடல் குதிரைகள் போன்ற விலங்குகளைப் பெருக்கும்போது இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள் உட்பட நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்ளுதல்.

பல கலாசார ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்தல்.

பின்னர், CLS (Collecte Localisation Satellites SA) நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், அவர்களின் செய்மதி தரவு பெறுதல் மற்றும் பகுப்பாய்வு வசதிகள் குறித்து அறிந்துகொள்ளப்பட்டது. இதன்போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்:

பல நிறுவனப் பயன்பாட்டிற்காக (MEPA, NARA, DFAR, முதலியன) செய்மதி அடிப்படையிலான தொழில்நுட்ப மையத்தை நிறுவுதல்.

உயர் தெளிவுத்திறன் கொண்ட செய்மதி புகைப்படங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள்.

NEMO சிறிய படகு கண்காணிப்பு அமைப்பின் நடைமுறைப் பயன்பாடு.

மேலும், Quiet Oceans நிறுவனத்தின் Maud Duma அவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதன்போது கடல் பாலூட்டிகளின் சத்தங்களைக் கண்டறிதல் மற்றும் நடத்தை பகுப்பாய்வுக்கான அவர்களின் Smartpam போன்ற தனியுரிம கருவிகளின் பயன்பாடு குறித்து முக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இந்தக் கலந்துரையாடல்கள் எதிர்காலத்தில் இலங்கையின் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் முகாமைத்துவத்திற்கு அர்த்தமுள்ள ஒத்துழைப்பையும், புதிய செயற்பாடுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

Youtube