2024.02.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியைக் கண்காணிக்க விஜயம் மேற்கொண்டார். இங்கு மீன் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முக்கியமாக பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியில் சோலா தொகுதி ஒன்றைப் பொருத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இங்கு நிலவும் பல பிரச்சனைகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த சோலா தொகுதி பொருத்தப்பட்ட பின், பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதி மிகக் குறைந்த மின்சார கட்டணத்தைக் கொண்டிருக்குமெனவும் இதன் ஊடாக மீன் விற்பனை சந்தை தொகுக்கு அதிக வருமானம் கிடைக்கும். இதற்காக சோலா தொகுதி நிறுவூம் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், அவர்களுடன் கலநதுரையாடி அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளை செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறிப்பாக மீன் விற்பனை சந்தை தொகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளின் தேவைகள் பலவும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதுடன், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மீன் விற்பனை சந்தை தொகுதிக்குள் துhய்மை குறித்தும் நிர்வாக சபை அதிகாரிகளுக்கு முக்கியமாகத் தெரிவிக்கப்பட வேண்டுமெனவும், மீன் விற்பனை சந்தை தொகுதியின் நிலைமையை மேலும் மோசமடைவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் சிறந்த சுகாதாரத் தன்மையுடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மீன் விற்பனை சந்தை தொகுதி வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அமைச்சர் கலந்துரையாடி, இதற்கு அவைகளை அகற்றுவதற்குப் பொருத்தமான வேலைத் திட்டத்தை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.
இவ்வாறான பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்த அமைச்சர், மீன் விற்பனை சந்தை தொகுதியின் நடவடிக்கை தொடர்பாக கவனம் செலுத்தி வருவதாகவும், இதற்கமைய தமது கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருக்குமெனவும் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.