en banner

1101 1பெப்ரவரி மாத இறுதியில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றதுடன், அதற்கு எமது நாட்டின் வர்த்தக அமைச்சர் திரு நளின் பர்னாந்து அவர்களுடன் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டது.

இங்கு உலக மீனவ மக்களின் நல்வாழ்வுக்காக சில முடிவுகளை எடுப்பது தொடர்பான திட்டங்கள் இம்மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான கலந்துரையாடல் 2023.01.12ஆந் திகதி வர்த்தக அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கிடையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் எமது நாட்டின் ஜெனிவா துhதுவராக இருக்கும் திரு சமந்த அவர்களுடன் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டு இந்த வர்த்தக மாநாட்டில் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கை சம்பந்தமாக பேசப்பட்ட விடயங்கள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்த பின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றினார்.

அபிவிருத்தியடைந்துவரும் நாடான இலங்கையில் மீனவ சமூகத்தைப் பாதுகாத்து வலுப்படுத்துவதற்கு மானியங்கள் அல்ல, அதற்கு அவர்களை ஊக்குவிப்பதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளன அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் சுட்டிக் காட்டியதுடன், இந்நிலையில் இருந்து இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். குறிப்பாக அருகிவரும் டூனா மீன் இனம் தொடர்பாக இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு எமது நாட்டு மீனவர்களுக்கு பாதகமாக இருப்பின்; எடுக்கும் முறையில்  ஏற்றுக் கொள்வதற்கு நாம் இடமளிக்க கூடாதென தெரிவித்த அமைச்சர்இ மீன் பெருக்கம் தொடர்பாக மற்றும் குறைந்து வரும் குடித் தொகை கொண்ட மீன்களை மதிப்பிடுவதற்கு மிண்ணணு ஆய்வுகளுக்கு எமக்கு ஆதரவை வழங்கினால் அவை பெறுமதியாக  மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அறியத் தந்த இந்த மாநாட்டுக்கு சம்பந்தப்பட்டவரான வர்த்தக அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் உட்பட ஏனைய அதிகாரிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொணடார். நமது கடல் வளம் தொடர்பாக மற்றும் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தவதற்கு நமது மீன் ஏற்றுமதி தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

உலக முழுவதிலுமுள்ள சகல வர்த்தக அமைச்சர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டதுடன், இங்கு முன்வைக்கப்படும் முடிவுகள் 109க்கு மேற்பட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டால் அது சர்வதேச சட்டமாக மாறும் எனவே வளரும் நாடுகள் என்ற வகையில் இந்த மாநாட்டை கவனமாக கையாள வேண்டும் அமைச்சர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்னஇ வர்த்தக அமைச்சின் செயலாளர், கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த அடங்கலாக இரு அமைச்சுகளினதும் அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube