தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (10.08.2023) அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தேரிவித்தார்.
மீனவர்களின் பெருமையைப் பாதுகாத்து நவீன தொழில்நுட்பத்துடன் மீன்பிடித் தொழிலை முன்னேற்றுவதற்கு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் டிஜிடல்மயமாக்கும் முதற் கட்டமாக வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறையின் அறிமுகம் 2023 ஜூன் மாதம் 13ஆந் திகதி கம்பஹா கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பல மீனவ சங்கங்கள் வேதனையடைவதுடன், அதனை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையில் 2023.07.26ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

கடற்றொழில் திணைக்களத்தினால் மீன் எற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கல், ஏனைய மீன்பிடி உற்பத்தி ஏற்றுமதியின்போதும் மற்றும் இறக்குமதியின்போதும் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கும் வழங்கப்படும் VMS தொழில்நுட்பம் அடங்கலாக ஏனைய அனுமதிப் பத்திரங்களுக்கும் பணம் செலுத்தும் நடவடிக்கை இதன் பின்னர் இலங்கை வங்கியுடன் இணைந்து இணையதளத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வைபவம் 2023.06.16ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- உடவலவ நீர்த்தேக்கத்தில் இரண்டு நாட்களில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள சாதனை அளவிலான நன்னீர் மீன் அறுவடை!
- அமெரிக்காவிற்கான மீன் ஏற்றுமதித் தடைகள் நீக்கம்: இலங்கையின் நண்டு ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசாங்கத்தின் NOAA நிறுவனம் உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியது
- கடற்றொழில் துறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தரவுகளுடன் 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' ஆராய்ச்சி கப்பலின் பயணம் வெற்றிகரமாக நிறைவு
- இலங்கையின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமைவாக மேம்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட ஆய்வு வெற்றிகரமாக நிறைவு
- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி





