en banner

WhatsApp Image 2023 06 12 at 16.23.14

கடற்றொழில் திணைக்களத்தினால் மீன் எற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப் பத்திரம் வழங்கல், ஏனைய மீன்பிடி உற்பத்தி ஏற்றுமதியின்போதும் மற்றும்  இறக்குமதியின்போதும் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கும் வழங்கப்படும் VMS தொழில்நுட்பம் அடங்கலாக ஏனைய அனுமதிப் பத்திரங்களுக்கும் பணம் செலுத்தும் நடவடிக்கை இதன் பின்னர் இலங்கை வங்கியுடன் இணைந்து இணையதளத்தின் ஊடாக கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தும் வைபவம் 2023.06.16ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய அனைத்து நிறுவனங்களையும் டிஜிடல்மயமாக்குவதன் மூலம் மக்களுக்கு மிக இலகுவாகவும், துல்லியமாகவும், விரைவாகவும் பணம் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதே இந்த டிஜிடல்மயமாக்கலின் நோக்கமாக இருப்பதுடன் இதன் ஊடாக மிக திறமையாக இதனை கையாளப்படுவதால், மீன் மற்றும் மீன் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மிக விரைவாக மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். இவ்வாறான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதன் ஊடாக ரூபா 45 மில்லியனுக்கும் அதிகமான தொகை கடற்றொழில் திணைக்களத்துக்குக் கிடைப்பதுடன் ஏஆளு தொழில்நுட்பத்துக்கு இன்று அனுமதிப் பத்திரம் வழங்கும் முறையின் மூலம் மீன்பிடிப் படகின் உரிமையாளர்களிடமிருந்து ரூபா 120 மில்லியனுக்கு மேல் கடற்றொழில் திணைக்களத்துக்குக் கிடைப்பதாகயும், இந்த பரிமாற்றங்கள் அனைத்தும் இணையதளத்தின் ஊடாக Visa மற்றும் Master card  அட்டையின் மூலம்  உலகில் எங்கிருந்தாலும் பணம் செலுத்த முடியும் எனவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதற்காக மிக இலகுவாக பணம் செலுத்த முடியும் எனவும்  அவர் தெரிவித்தார்.

இதற்கமைய மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய எமது நாட்டில் உள்ள அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச அலுவலகங்களை டிஜிடல்மயமக்கும் செயற்பாடு மிக விரைவில் அமுல்படுத்தப்பட்டால் நாடு விரைவான அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு பேசிய இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அவர்கள் அரசு என்ன செய்தாலும் எதிர்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிக்கும் எனவும், அரசாங்கம் தவறு செய்தால் அதனை வேண்டாமென எதிர்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொண்டதுடன், அபிவிருத்தியை விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் கடற்றொழில் அமைச்சரவை அமைச்சரின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கை வங்கியூடன் இணைந்து கடற்றொழில் திணைக்களத்தின் அனைத்து கொடுப்பனவ நடவடிக்கைகளையும் டிஜிடல்மயமக்கி மீன்பிடித் தொழில்பாட்டுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்க முடியுமென அவர் அறிவித்தார்.  இங்கு கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளர் திரு கருணாரத்ன ஆகியோர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி அனுஷா கோகுல அடங்கலாக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

WhatsApp Image 2023 06 12 at 16.23.12

WhatsApp Image 2023 06 12 at 16.23.13

WhatsApp Image 2023 06 12 at 16.23.15

WhatsApp Image 2023 06 12 at 16.23.17

WhatsApp Image 2023 06 12 at 16.23.18

WhatsApp Image 2023 06 12 at 16.23.19

WhatsApp Image 2023 06 12 at 16.23.19 1      

சமீபத்திய செய்திகள்

Youtube