பெப்ரவரி மாத இறுதியில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) வர்த்தக அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றதுடன், அதற்கு எமது நாட்டின் வர்த்தக அமைச்சர் திரு நளின் பர்னாந்து அவர்களுடன் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டது.
கடற்றொழில் அமைச்சரினால் முன்வைப்பதற்கு எதிர்பார்த்திருக்கும் புதிய கடற்றொழில் சட்டம் இலங்கையில் மீன்பிடி தொழிலுக்கு சர்வதேச நிலைக்கு மேம்படுத்துவதற்கு,

முல்லைத்தீவு பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபடும் மீனவ சங்கங்களின் அலுவலர்கள் குழுவினர்இ தமது தொழிலை நடாத்துவதில் ஏற்படும் சிக்கல் குறித்து அமைச்சருக்குத் தெரியப்படுத்துவதற்கு 2024.02.06ஆந் திகதி கொழும்பு கடற்றொழில் அமைச்சில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

2024.02.11ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பேலியாகொட மீன் விற்பனை சந்தை தொகுதியைக் கண்காணிக்க விஜயம் மேற்கொண்டார். இங்கு மீன் விற்பனை சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயானா குமாரி சோமரத்ன அடங்கலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட லோரன்சோ புத்தா மீன்பிடிப் படகு மற்றும் 4 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 2024.02.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்
- மாத்தறை மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விரைவான நடவடிக்கை: ஒதுக்கப்பட்ட பாரிய நிதியை முறையாகப் பயன்படுத்தி மீனவர்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குங்கள் - அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் ரத்ன கமகே கடும் அறிவுறுத்தல்





