மீனவர்களினால் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக முன்வைக்கும் பிரதான பிரச்சனை எரிபொருள் பற்றியதாகும். வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலையேற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 26.01.2024ஆந் திகதி வெள்ளமங்கரையில் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து நடைபெற்றபோது இதனைத் தெரிவித்தார்.
இது இந்த வருடத்துக்குள் மீனவ மக்களுக்கு கிடைத்த மாபெரும் சேவையாகும் எனக் கூறிய அமைச்சர், கடந்த காலங்களில் ஆழகடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சனையாக இருந்தது, மீனவர்கள் திடிரென நோய்வாய்ப்பட்ட பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எப்படி என்பதுதான். அவ்வாறு நோய்வாய்ப்பட்ட மீனவர்கள் பலர் அதே படகில் இறந்துள்ளதாகவும், நோய்வாய்ப்பட்ட மீனவர்கள் சிலருக்கு உதவி வழங்குவதற்கு அவர்கள் அருகில் இருக்கும் வெளி நாடுகளின் உதவியை நாட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் அந்த மீனவரை இலங்கை கடற்படையின் உதவியுடன் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும், அதற்காக அவர்களுக்குப் பெருந் தொகைப் பணம் செலவிட நேரிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இந்த நலன்புரிதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாவும், இந்த வேலைத் திட்டத்தை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு, மீனவ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பிரதேசங்களில் உள்ள வைத்திசாலைகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மீனவ மக்;கள் எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையில் அரசினால் திட்டங்கள் பல தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வேலைத் திட்டத்தை ஏற்பாடு செய்த கடற்றொழில் திணைக்களத்துக்கும், சுகாதார அமைச்சருக்கும், கடற் படையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிறுவனத் தலைவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண அவர்கள் கலந்துகொள்ள இருந்த போதிலும், அவரால் அவசர வேலைகள் காரணமாக கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த அமைச்சர், அவரின் ஆதரவும் மற்றும் சுகாதார அமைச்சரின் ஆதரவும் தருவதாக உறுதியளித்தனர். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இப்பிரதேசத்தில் இருந்த கடற்றொழில் பிரதி அமைச்சராக செயலாற்றிய திரு சனத் நிஸாந்த அவர்களின் மரணம் குறித்தும் அமைச்சர் தனது ஆழந்த வருத்தத்தையும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த அவர்கள், உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மீனவர்கள் கடும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விசேட வேலைத்திட்டம் இக்காலப் பகுதியில் மீனவர்களுக்கு இந்த விசேட வேலைத்திட்டம் மிக முக்கியமானதெனவும், நாடளாவிய ரீதியில் உள்ள 24 வைத்தியசாலைகளிலும் இன்று முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார் மேலும் பல்தின மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு இது முக்கியமானதென தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தான் மாதக் கணக்கில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களுக்கு முதலுதவி பெட்டி வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இது மீனவர்களுக்கு பயன்தரும் எனவும் தெரிவித்தார்.
முதலுதவி பயிற்சி முடித்த மீனவர்களுக்கு முதலுதவி பயிற்சி சான்றிதழ்களும், மருத்துவ பரிசோதனை முடித்த மீனவர்களுக்கு வைத்திய சான்றிதழும் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இச்சந்தர்ப்பத்தில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன, பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் திருமதி சம்பிகா, கடற் படையின் வைத்திய துறையின் வைத்தியர் தினேஸ் ஆரியதேவ மற்றும் கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு சத்தியானந்நதன் முன்னாள மாகாண சபை உறுப்பினர் திரு அர்வின் பர்னாந்து ஆகியோர்கள் அடங்கலாக பெருமளவு அதிகாரிகளும’ கலந்து கொண்டிருந்தனர்.