
சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தின் நிலப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனைக்கு 15 கடைகள் சிலாபம் நகரத்தில் மீனவ சங்கத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கும் வைபவம் 2023.11.17ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் H.E MIZUKOSHI HIDEAKI அவர்கள் 2023.11.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் வேண்டுகோளின் பேரில் இலங்கையில் மீன்பிடி நடவடிக்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்பானிய அரசாங்கத்தால் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்ட 435 மில்லியன் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் அலங்கார மீன் தொழில் நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் பெறுமதி வாய்ந்த தொழிலாகவும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும், அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் அதற்குப் பாரிய அளவில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 2023.10.07ஆந் திகதி பொரளையில் தப்ரபோன் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கையின் மிகப் பெரிய அலங்கார மீன் கண்காட்சி மற்றும் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

2023 நவம்பர் 21ஆந் திகதி நடைபெறவுள்ள சர்வதேச மீனவர் தினம், கடற்றொழில் அமைச்சினால் ஒவ்வொரு வருடமும் இந்நாட்டு மீனவர்களை ஒன்று திரட்டி, மிக வெற்றிகரமாக நடாத்தி நடாத்தி வருகிறது. இம்முறை மீனவர் தினத்தின் கருப்பொருளாக “ஆரோக்கியமான கடல் சுற்றுசூழல் அமைப்புகளின் பிரதான முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி மற்றும் உலகின் நிலையான மீன்வளத்தை உறுதிப்படுத்தல்” எனும் தலைப்பாக உள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஹூங்கம ஹாத்தகல பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேச இறால் செய்கை செயற்றிட்டத்துக்கு காணி ஒதுக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் 2023.10.05ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- மாலைதீவு கடல் எல்லையை கடக்கும் பலநாள் மீன்பிடி கலன்களுக்கு கடும் சட்டங்கள்: விதிமுறைகளை மீறுவோருக்கு பாரிய அபராதம் விதிக்கப்படும் அபாயம்
- நார்வேயின் மிகப்பெரிய கடல் உணவு நிறுவனம் இலங்கையின் மீன் பதப்படுத்தும் துறையுடன் இணைந்து செயற்பட ஆர்வம்
- சவால்களை வென்றெடுத்த பெருமைக்குரிய கடற்றொழில் சமூகத்திற்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
- கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
- இலங்கை - மாலைதீவு கடற்றொழில் ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படுகிறது: மாலைதீவு ஜனாதிபதியின் வருகை மற்றும் கடற்றொழில் துறையின் புதிய முதலீடுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் இடையில் கலந்துரையாடல்





