இலங்கையின் கடற்றொழில் துறையை நவீன தொழில்நுட்பத்துடன் வலுவூட்டல், தரவுகள் அடிப்படையிலான உரிய தீர்மானங்களை எடுத்தல் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பை பலப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "கடற்றொழில் துறை தீர்மான ஆதரவு முறைமை" (Fisheries Sector Decision Support System - DSS) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.
Inclusive Digital Agriculture Transformation (IDAT) வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த விசேட டிஜிட்டல் தளம், இலங்கையின் கடற்றொழில் துறையின் புத்தாக்கத்தை நோக்கிய ஒரு பாரிய முன்னெடுப்பாகும்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.









