en banner

WhatsApp Image 2024 02 06 at 16.38.33 1

சோமாலியா கடற் கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட லோரன்சோ புத்தா மீன்பிடிப் படகு மற்றும் 4 மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் 2024.02.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் அமைச்சில் நடைபெற்றது.

தற்போது சீசெல் நாட்டில் உள்ள மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பாக தங்கியுள்ளதுடன், படகினுள் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு வெளியில் பணத்துக்கு உணவைப் பெற வேண்டியுள்ளதாகவும், இதற்கு அவர்களிடம் பணம் இல்லாமையால் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக படகின் உரிமையாளர் மில்றேயி பெரேரா தெரிவித்தார் அத்துடன் இப்படகினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ரூபா 15 இலட்சம் எரிபொருள் செலவாகுமெனவும், இவ்வாறான பெருந் தொகைப் பணம் தங்களால் செலவிட முடியாதுள்ளதகவும், இதற்கு அமைச்சிலிருந்து யாதேனும் உதவியை எதிர்பார்ப்பதாகவும், தற்போது படகில் இருக்கும் மீன்களை விற்று இத்தொகை ஈடு செய்ய முடியுமெனவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

இங்கு அமைச்சல் சீசெல் மாகாணத்தின் இராஜதந்திரியுடன் தொலைபேசியில் கலந்துரையாடியதுடன், அப்படகிலுள்ள மீனவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். தற்போது படகின் உரிமையாளர் வங்கி கடன் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  அமைச்சரின் ஊடாக செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் செயற்பட்ட ஊடாக செயலாளர் திரு நெல்சன் எதிரிசிங்க அவர்கள் சம்பந்தப்பட்ட வங்கித் தலைவருடன் கலந்துரையாடியதுடன்இ வங்கி தலைவர் படகினை இந்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் தேவையான நிதியுதவிகளை வழங்க அவர்கள் தலைவர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். 

கடந்த ஜனவரி 27ஆந் திகதி 06 மீனவர்களுடன் சர்வதேச கடல் எல்லையில் தொழில் செய்து கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட இந்த மீன்பிடிப்படகு கடற்றொழில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் மற்றும் கடற் படை அடங்கலாக அதிகாரிகளின் தலையீட்டுடன் சீசெல் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பாக படகின் உரிமையாளர், அமைச்சர் உள்ளிட்டோர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

 இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் செல்வி நயனா குமாரி சோமரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த, மீன்பிடிப் படகின் உரிமையாளர் திரு மில்றௌயி பெரேரா ஆகியோர்கள் அடங்கலாக மற்றும் மீனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.    

சமீபத்திய செய்திகள்

Youtube