en banner

DSC 0282 1

திருகோணமலை உட்பட கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாக பல மீனவ சங்கங்கள் வேதனையடைவதுடன், அதனை நிறுத்துவதற்கு எடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர்களுக்கிடையில் 2023.07.26ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள், தான் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பணி புரிய ஆரம்பித்தது முதல், இப் பிரதேசத்தின் பல சிவில் அமைப்புகள் தன்னுடன் மாகாணத்தின் பிரச்சனை பற்றி கலந்துரையாடியதாகவும், அதில் பல குழுக்கள் திருகோணமலை மாவட்டத்துக்குள் நிலவும் மீன்பிடி பிரச்சனைகள் தொடர்பான விடயங்கள் முன்வைத்தாகவும் அவர் கூறினார். சட்ட விரோதமான முறையில் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி கடல் வளங்களை அழிப்பது மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களமாக பிரகடனப்படுத்தப்பட்ட கடந்த காலங்களில் நீர்வாழின செய்கையில் ஈடுபட்ட பெரும்பாலான பிரதேசங்கள் வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைகிகளத்தினால் இக்காணிகள் கையகப்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதிகளை மீண்டும் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமென ஆளுநர் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி, வட மாகாணத்திலும் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்களைக் கட்டுப்படுத்துமாறு ஏற்கனவே கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இவ்வாறான சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பிரதேசங்களில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த நிலையைக் கருத்திற் கொண்டு கடனீரேரிகள் மற்றும் வனப் பிரதேசங்கள் வனப் பாதுகாப்பு வலயமாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது அப்பிரதேசங்கள் நீர்வாழின செய்கைக்கு விடுவிப்பதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் சிறிது கால தாமதம் செய்து வருவதாகவும், எனினும், இது தொடர்பாக அமைச்சருடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும், எதிர் காலத்தில் அக்காணிகளை விடுவித்து வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மிக விரைவாக நீர்வாழின செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்த மற்றும் பலர் கலந்த கலந்து கொண்டிருந்தனர்.  

சமீபத்திய செய்திகள்

Youtube