en banner

DSC 1040

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சமீபத்தில் சிலாபம் கடனீரேரியை அவதானிப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தோன்றியுள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் 2023.06.06ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் சிலாபம் ஐக்கிய மீனவ சங்கத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இங்கு தேசிய இறால் தொழிலை மேற்கொள்வதற்கு தற்போதுள்ள தடைகளை நீக்கி இந்த இறால் குஞ்சுகள் கடனீரேரி மற்றும் உள்ளக நீர்நிலை சார்ந்து விடுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு நீர்வாழின செய்கை நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் தற்போது இறால் வகையைச் சேர்ந்த மிவகாவ இனம் தொற்று நோய்களுக்கு உட்பட்டு சிலாபம் பிரதேசத்தில் இறால் தொழில் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்கையாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதற்கமைய பாரம்பரிய இறால் தொழிலை மீளக் கடடியெழுப்புவதற்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர்இ மீனவர்களின் வேறு பிரச்சனையாக சமர்ப்பிக்கப்பட்ட வானொலி நிலையம் ஒன்றை மிக விரைவில் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்த அமைச்சர், கடனீரேரியை சுத்தம் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று சிலாபம் கடனீரேரி பிரதேசத்துக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இங்கு மீனவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சனைகள் பலவற்றுக்கு உடனடியாக தீர்வு வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.   

இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்னாயக்க, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு சுசந்த கஹவத்தஇ நீர்வாழ் உயிரினனச் செய்கை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி அசோக்கா ஆகியோர்களுடன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.       

சமீபத்திய செய்திகள்

Youtube