பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு 50 கிலோ ஐஸ் கட்டியொன்றை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார்.
கடற்றொழில் அமைச்சில் நேற்று (06) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
பேலியகொடை மத்திய மீன் விற்பனை சந்தைக்கு 50 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டிகளை 850 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அமைச்சரிடம் வர்த்தகர்கள் முறையிட்டிருந்தனர.; இதனைத் தொடர்ந்து ஐஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அமைச்சர் 50 கிலோ நிறை கொண்ட ஐஸ் கட்டிகளை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறும் அதனால் அவற்றை மீன் வியாபாரிகளுக்கு 650 ருபாவிற்கு விற்பனை செய்ய முடியூமெனவூம் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் குறைந்த விலையில் ஐஸ் கட்டிகளை விநியோகிப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களும் உடன்பட்டனர்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.