இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் டிஜிடல்மயமாக்கும் முதற் கட்டமாக வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறையின் அறிமுகம் 2023 ஜூன் மாதம் 13ஆந் திகதி கம்பஹா கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பொது நிறுவனங்களை நவீனமயமாக்கும் டிஜிடல் உலகத்திற்கு ஏற்றவாறு ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய வேலைத் திட்டத்துக்கு இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இந்த புதிய கட்டண முறையை SLT மொபிட்டல் மற்றும் Lanka QR ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் அங்குராhர்பண நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திரு பியல் நிஸாந்த த சில்வா அவர்கள், இது ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பம் என தெரிவித்தார்.
“அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அரச நிறுவனங்களை நவீன உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தவூம்இ நம்நாட்டு அரச நிறுவனங்களில் பல காலவதியான அமைப்புகள் இன்னமும் இயங்கி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்படுவதைப் போன்று மோசடி மற்றும் ஊழல் அதிகரிப்பதற்கு வழிவகிக்கின்றது. இது இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் எடுத்துள்ள ஒரு நடவடிக்கையாகும். ஆனால் இது டிஜிடல் மயமாக்கலை நோக்கிய பயணத்தின் முதற் படியும் ஆரம்பமுமாகும்”.
இதற்கமைய நாடு முழுவதிலுமுள்ள 100க்கும் மேற்பட்ட இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் QR குறியீட்டின் மூலம் ஜூன் 13ஆந் திகதி முதல் பணம் செலுத்த முடிம். எதிர்காலத்தில கூட்டுத்தாபனத்தின் நிதி அமைப்புகள் உள்ளிட்ட பல பிரிவுகள் டிஜிடல் மயமாக்கப்படும். வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கும்போது மோசடி மற்றும் ஊழலற்ற நிதி சுழற்சியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்
இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு டி.வீ;. உபுள், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் திரு ரவீந்திர குணரத்ணஇ பிரதி பொது முகாமையாளர் SLT mobitel திரு ரண்மல் பொன்சேக்கா ஆகியோர்கள் அடங்கலாக பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.