கம்பஹா, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மீன் விற்பனை நிலையத்தில் விஷேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 04ம் மற்றும் 05 ஆம் திகதிகளில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மதுரங்குளியில் உள்ள Ocean Food தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஓஷன் ஸ்டார் ஜாக் மெக்கரல் டின் மீன்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்கலன்களில் ஏற்றுவது, 2025 மார்ச் 29 அன்று தொழிற்சாலை வளாகத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேயின் தலைமையில் நடைபெற்றது.
மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கொக்கல வாவியில் 60,000 மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டன. இந்நிகழ்வு கத்துலுவ குருக்கந்த படகுத்துறையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது.
Danusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடி படகின் வெளியீட்டு விழா 03ம் திகதி அன்று திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் திரு.ராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் மாகாண மீன்வள அமைச்சின் செயலாளர்களுக்கும் மத்திய அரசாங்க கடற்றொழில் அமைச்சின் பிரதானிகளுக்கும் இடையில் கடந்த (28) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சமீபத்திய செய்திகள்
- யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆற்றிய உரை
- யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமாகியது.
- අනුරාධපුර මිරිදිය ධීවර කර්මාන්තය නගා සිටුවීමට ඒකාබද්ධ වැඩපිළිවෙළක්
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை: மாவட்ட மட்டத்தில் ஒன்றிணைந்த செயற்றிட்டங்கள் ஆரம்பம்
- வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த ரூபா 1,127.5 மில்லியன் பாரிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்