இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நோர்வேயின் பேர்கன்-வெஸ்ட்லாண்ட் பில்கே (Bergen-Vestland Flyke) கொன்சல் திரு. ஸ்டர்லே எச். பெடர்சன் (Sturle H. Pedersen) அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று (16) அமைச்சில் நடைபெற்றது.
தென் மாகாணத்தின் கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 86 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீன் விற்பனை கொள்கலன்களை வழங்கும் விசேட திட்டமொன்று கடந்த மார்ச் 13ஆம் திகதி மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கான நிதி ஒதுக்கீடுகளை தென் மாகாண கடற்றொழில் அமைச்சு வழங்கியிருந்தது.
"திட்வா" (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மீனவ சமூகத்திற்கு 26.9 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இணையாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கடந்த 11 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் 11ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
குருநாகல் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சமீபத்திய செய்திகள்
- இலங்கையின் கடற்றொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
- கடற்றொழில் துறையில் டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம்!
- பேருவளையில் புதிய படகு இறங்குதளம் திறப்பு: 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிய பயணத்தில் புதிய பாதை திறக்கப்படுகிறது - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
- இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் விநியோக வலையமைப்பை வலுப்படுத்த ஜப்பானிடமிருந்து 200 மில்லியன் ரூபா பெறுமதியான 06 குளிரூட்டப்பட்ட வாகனங்கள்
- நாட்டின் படகு ஏற்றுமதித் துறைக்கு புத்துயிர் : பேருவளை புதிய படகு இறங்குத்துறையின் செயல்பாடுகளை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க இணக்கம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல்





