en banner

WhatsApp Image 2025 09 04 at 15.57.24

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புனிதப் பிறப்பைக் கொண்டாடும் இந்த இனிய நாளில், இலங்கை வாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் நேர்மை போன்ற நபிகளாரின் உன்னத போதனைகள், பன்மைத்துவ சமூகம் கொண்ட நமது நாட்டில் நல்லிணக்கத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழிகாட்டுதல்களாகும்.

கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இலங்கையின் கடற்றொழில் துறையின் வளர்ச்சிக்கு முஸ்லிம் சமூகம் ஆற்றிவரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை நான் இப்பொழுதில் பெருமையுடன் நினைவுகூர்கிறேன். கடற்றொழில், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி போன்ற துறைகளில் அவர்களின் அயராத உழைப்பு, நமது பொருளாதாரத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

"தன் கையால் உழைத்து சம்பாதிக்கும் நேர்மையான வருமானத்தின்" மேன்மை குறித்த நபிகளாரின் போதனை, இரவும் பகலும் கடலோடு போராடும் எமது கடற்றொழிலாளர் சமூகத்தின் வாழ்விற்கு சிறந்த வழிகாட்டியாகும்.

இந்த புனித நாளில், நமது கடல் வளத்தைப் பாதுகாத்து, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும், ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் செயற்பட்டு, எமது கடற்றொழில் துறையையும், எமது நாட்டையும் வளமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த உறுதிகொள்வோமாக.

அனைவருக்கும் அமைதி நிறைந்த மீலாத் உன்-நபி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்திய செய்திகள்

Youtube